அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்

Published By: Digital Desk 3

06 Jul, 2020 | 12:31 PM
image

அமெரிக்காவில் இடாஹோ மாநிலத்திலுள்ள ஏரிக்கு மேலாக,  இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில், 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இடாஹோவில் உள்ள கோயூர் டி அலீன் ஏரிக்கு மேலாக இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதன் பின்னர் நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் இறந்த இருவர் நீரில் மூழ்குவதற்கு முன்னர் விமானத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரின் நிலைக் குறித்து இன்னமும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றபோதும், அவர்களும் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களில் பெரியவர்கள், குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்துக்கான காரணம் மற்றும் விமானத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

மேலும், விமானங்கள்  நீரிருக்குள் 127 அடி ஆழத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய இரண்டும் இந்த மோதல் குறித்து விசாரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52