பலாங்கொடை எல்லராவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

பரமசிவம் நிசாந்தன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த நபர் பலாங்கொடை நகரில் பழைய இம்பு பொருட்கள் கொள்வனவு செய்யும் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.