பொன்னம்பலம், துரையப்பா, மெளலான ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற்றாலே நல்லிணக்கம் தோற்றம் பெறும் - மஹிந்த

Published By: Vishnu

05 Jul, 2020 | 08:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் தோற்றம் பெற வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது விடேச ஊடக அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒற்றையாட்சி என்ற சொற்பதத்தை கைவிட்டு இலங்கையை 'ஒரு பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத மாநிலம்' என்று அடையாளப்பத்துவது, மத்திய அரசிடமுள்ள அதிகாரத்தை முடிந்தளவு மாகாண சபைகளுக்கு பிரித்து வழங்குவது, மாகாண சபையை பிரதிநிதிகளாலான இரண்டாவது பிரதிநிதிகள் சபையை உருவாக்குவதன் மூலம் மத்திய சட்டமன்றத்தின் (பாராளுமன்றத்தின்) அதிகாரத்தை மேலும் கட்டுப்படுத்துதல், பாராளுமன்றத்தில் நிதிச் சட்டத்தை நீக்கி மாகாண சபைகளுக்கு சுயாதீனமாக நிதி சேகரிப்பதற்கு இடமளித்தல், மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களை அரச அதிகாரிகளை மாகாண சபையின் கீழ் நியமித்தல் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்குமிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வேறொரு அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்கல் போன்ற விடயங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்  ஜனாதிபதி   வேட்பாளராக போட்டியிட்ட போது 'இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு வரையறை இல்லை, ஒன்றாக பயணிப்போம் என்ற கொள்ளை பிரகடனத்தில் 15 - 16 ஆம் பக்கத்தில் மக்களின் அரசியலமைப்பு என்ற விடயத்தில் குறிப்பிடப்பட்டhர்.

நல்லாட்சி  அரசாங்கத்தில்   முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்த   புதிய   அரசியலமைப்பு வரைபிற்கும் சஜித் பிரேமதாச  ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  கொள்கை பிரகடனத்திற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.  . நாட்டை பிரித்து வேறாக்க வேண்டுமாயின் சர்வதேசத்திற்கு மத்தியில் ஒன்றையாட்சி இல்லாது 'யுனிடரி ஸ்டேட்' என்ற பெயரில் விசேட தொழிநுட்ப அர்த்தம் கொண்ட ஆங்கில பதத்தை எங்களுடைய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும்.

பிரதான அரசியல் கட்சி பிரிவினைவாதிகளின் நோக்கத்தை  தங்களுடைய கொள்கை பிரகடனத்தில் வெளிப்படையாக உள்வாங்கியிருப்பது பாரதூரமான  செயற்பாடாகும்.  இவ்வாறாக விடயங்களை மநாயக்கர்களிடம் சமர்ப்பிக்காமல்   முன்னெடுத்தனர்.  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய  தேசிய கட்சி  வெற்றிப் பெற்றிருந்தால்  இந்த பிரிவினைவாத கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மநாயக்கர்களின் ஆசிர்வாதமும் மக்களின் ஆணையும் கிடைத்ததாக்க கூறியிருப்பார்கள்.

2010 ,  2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்றி நாட்டின் பெரும்பான்மை மக்களை காட்டிக் கொடுத்து நாட்டை பிளவுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்த அவர்கள் ஒரே அரசியல் குழுவாகும். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த இவர்கள்  தற்போது ரணிலுக்கு சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாதுஇ சஜித்துக்கு முடியுமெனக் கூறி  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்கள்.

இந்த ஒப்பந்தத்தில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடிந்தவரை வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து குடும்பங்களுக்கும் 25000 ரூபா வழங்கும் போன்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். 

இன , மத அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய இனம் அல்லது மத மக்களை மட்டும் கருத்தில் கொண்டு ஏனைய இன, மத மக்களை பிற   தரப்பினர்  அல்லது எதிரிகளாக கருதுகின்றன. இவ்வாறானதொரு அரசியலினாலே   ஏபரல் தாக்குதல் இடம் பெற்றது. ஏதோனும் ஒரு அரசியல் கட்சி தங்களுடைய இன ,  மத மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் ஒருவித அரசியல் கைதிகளாக மாறுகின்றனர்.

சஹ்ரான்  ஹசிம் என்ற  தீவிரவாதி    மட்டக்களப்பில் ஒரு சிறிய ஆதரவாளர்களை உருவாக்கியதன் பின்னர் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டார்.  இதனால், அந்த மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து நிபந்தனைகளை விதிப்பதற்கும் அந்த பயங்கரவாதிகளளுக்கு   வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறான  இனவாத  மற்றும்      பிரிவினைவாத அரசியல் கட்சிகள் இருக்கும் போது நாட்டின் தேசிய கட்சிகளை இவ்வாறான தீவிரவாத  கட்சிகள் கட்டுப்படுத்தும். பின்னர அரசாங்கத்தை    மறைமுகமாக தீவிரவாத கட்சிகள்   கட்டுப்பத்தும். கடந்த நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறானதொரு அரசியலை முன்னெடுத்தமையினாலேயே குண்டு தாக்குதலுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

நாட்டில் மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலிருந்து ஒற்றுமை சமாதானம்  மற்றும் சகோதரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின்  இனவெறி அரசியலுக்கு எந்த நன்மையும் ஏற்படாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17