வவுனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த சிறுவனொருவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தால் சேர்க்கப்பட்ட சிறுவனே கடந்த 5 ஆம் திகதியில் இருந்து காணமால் போயுள்ளதாக   வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.