மஹிந்தானந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமீரபெரேரா

Published By: Digital Desk 3

05 Jul, 2020 | 06:52 PM
image

(செ.தேன்மொழி)

2011 உலகக்கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணைப் பிரிவு போதிய ஆதரம் இல்லை என விசாரணைகளை நிறுத்திவைத்துள்ளது. அதற்கமைய போலிக் குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் மஹிந்தானந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சமீரபெரேரா வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்தியல் மேலும் கூறியதாவது,

மஹிந்தனந்தவின் குற்றச் சாட்டு தொடர்பில் பரிசீலனை செய்தத் பின்னரே கிரிக்கட் வீரர்களை அழைத்து விசாரணை நடத்தியிருக்க வே     ண்டும். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்ககாரவுக்கு சர்வதேச மத்தியில் கிடைக்கவிருந்த வாய்ப்பையே இவர்கள் தட்டிப்பறித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐ.சி.சி) தலைவராக சங்ககாரவை தெரிவுச் செய்யவாய்பிருப்பதாக தெரிந்துக் கொண்டால் , நாம் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பைதான் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.  ஐ.சி.சி.யின் தலைவராக அவர் தெரிவுச் செய்யப்பட்டிருந்தால் எமது நாட்டுக்கும் பெருமை சேர்ந்திருக்கும்.

இந்நிலையில் அரசாங்கம் திட்டமிட்டே இந்த ஆட்ட நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்றுதான் எமக்கு தோன்றுகின்றது. இந்த பதவியை  பெற்றுக் கொள்வதற்காக சங்ககாரவுடன் இந்திய நாட்டு நபரொருவரே போட்டியில் இருந்தார். இவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே சங்ககாரவின் மீது வேனும் என்றே குற்றத்தை சுமத்தியுள்ளனர்.

இவர்கள்தான் ஆட்சிக்கு வந்து சிறிது காலத்திலே இந்தியாவுக்கு விஜம் செய்து , கடன்களை செலுத்துவதற்காக சலுகைகாலம் வழங்குமாறு மண்டியிட்டு வேண்டிகொண்டவர்கள். இதனால் இந்திய நாட்டு போட்டியாளருக்கு  வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில்தான் மஹிந்நதானந்த இவ்வாறு கூறியுள்ளாரா? என்றே சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

அதனால் இவ்வாறு போலியான குற்றச்சாட்டை சுமத்தியமை தொடர்பில் மஹிந்தானந்தவிற்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31