தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல - சிறீதரன்

04 Jul, 2020 | 10:22 PM
image

தமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழர்கள் தம்மைத்தாமே இந்த மண்ணிலே ஆளவேண்டும் என்பதற்காக நாம் 70 ஆண்டுகாலமாக போராடி வருகிறோம்  கோத்தபாய ராஜபக்ஷவின் அரசில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் தமிழர் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்ககாத்தான் தமிழர்கள் போராடினார்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படுமானால்  அவர்கள் போராடமாட்டார்கள் என்றும் தமிழ்த்தலைமைகள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்றும் கருத்துக் கூறிவருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் போது எமது மக்களினுடைய பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் எமது மக்களின் இயல்பு நிலை முன்னேற்றம் தொடர்பாகவும் பேசியிருந்தார்கள். அதை தலைவர் அவர்கள் நேரடியாக ஊடகவியலளார் சந்திப்பில் கூட தெரிவித்திருந்தார். சுனாமி வேளையில் செரான் என்கின்ற பணியகத்தை நிறுவி அதனூடாக சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமது மக்களின் பொருளாதார வாழ்வை முன்னேற்றுவதற்காக முயன்ற வேளை அப்போது இருந்த சந்திரிக்கா அரசினால் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆகவே சிங்கள பேரினவாத அரசுதான் தமிழ்மக்கள் தாமாகவே பொருளாதாரத்தை மேம்படுத்த தடையாக உள்ளதே தவிர தமிழ்த்தலைமைகள் எப்போதும் எங்களின் மக்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த தடையாக இருந்தது கிடையாது.

எமக்கு நிலையான அரசியல்த்தீர்வு கிடைக்கப்பெறுமானால் எமது மக்கள் தாமாகவும் புலம்பெயர் உறவுகளின்ஒத்துழைப்புடனும் எமது தேசத்தை கட்டியெழுப்புவோம். இன்று எமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்பது மிகவும் பிரச்சினையாக இருக்கிறது. நிலையான அரசியல் தீர்வு கிடைக்கப் பெற்றால் இவையும் எமக்கு ஒரு பிரச்சினையே இல்லை ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் எமது இளைஞர்களுக்கு வேலை இல்லாத பிரச்சியே இல்லாமல் இருந்தது. சேரன்  சுவையூற்று பாண்டியன் சுவையூற்று வருவாய்ப்பகுதி ஆயப்பகுதி வைப்பகங்கள் என்பவற்றினூடாக எமது மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருந்தார்கள் . எனவும் மேலும் குறிப்பிட்டார்

குறித்த சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பாராளுமன்ற வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தன் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40