தானிய இறக்குமதி நிறுத்தம் : அறுவடைகளுக்கு அதிக சந்தை வாய்ப்பு - ஜனாதிபதி தெரிவிப்பு

04 Jul, 2020 | 03:21 PM
image

அரசாங்கம் தானிய இறக்குமதியை நிறுத்தியுள்ள காரணத்தினால் தானிய வகைகளை அதிக விலைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்கும் வாய்ப்பு விவசாய சமூகத்திற்கு இப்போது உருவாகியுள்ளதென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

சோளம், உழுந்து, பயறு, கௌப்பி, குரக்கன் போன்ற தானியங்களை அதிகம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுமாறும் ஜனாதிபதி விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுராதபுரத்தில் நேற்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி  பங்குபற்றி பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார். 

உரிய காலத்திற்கு உரம் மற்றும் நீர் கிடைக்குமானால் தடைகளின்றி, பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியுமென விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

சேதன உரப் பாவனைக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எஸ்.சி.முத்துகுமாரன ஹொரவப்பொத்தனை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பதில் பாடசாலை அதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

பிரதேச பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னாள் அமைச்சர் திஸ்ஸகரலியத்த கெப்பித்திகொல்லாவ நகர பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி  பங்குபற்றினார். 

ஒப்பந்த முறைமையில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்தி செயன்முறைகள் காலதாமதமாகுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். 

சோற்றுக் கற்றாழை, நெல் மற்றும் சோளப் பயிர்ச் செய்கை தமது பிரதேசத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

சிறுநீரக நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் விவசாய சமூகம் முகங்கொடுத்துள்ள களஞ்சிய வசதிகள் குறித்த பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி  கவனம் செலுத்தினார்.

யானைகள் மனித மோதல் மற்றும் விவசாய கடன் சம்பந்தமாக மதவாச்சி பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

எச்.நந்தசேன மதவாச்சி சேனாநாயக்க சிறுவர் பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் மக்கள் இதுபற்றி தெரிவித்தனர். யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

சரத் மாரசிங்க அநுராதபுரம் மேற்கு தொலுவில தொல்பொருள் காப்பகத்திற்கு அருகிலும் பேராசிரியர் சன்ன ஜயசுமன, அநுராதபுரம் கிழக்கு வங்கி சந்தியிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.

உத்திக்க பிரேமரத்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்குபற்றிய ஜனாதிபதி, நாட்டின் விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அநுராதபுர மாவட்ட விவசாய சமூகம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன, முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47