( சசி)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைஞனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் இருந்ததைக்கண்டு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் குறித்த இளைஞன் கல்லடி பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்திருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடற்படையின் சுழியோடிகள் கொண்ட குழுவினரும் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இணைந்து இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதுவரையில் சடலம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.