கிரிக்கெட் வீரர்களை வாக்குமூலத்திற்கு அழைப்பது நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது : வீரர்களிடம் விசாரணை இல்லையாம்

Published By: Digital Desk 3

03 Jul, 2020 | 03:46 PM
image

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படமாட்டார்கள் என விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதுவரை வரவழைக்கப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களின் அறிக்கைகள் உண்மையானவை என்றும், போட்டியின் போது அணியில் மாற்றம் ஏற்படுவதற்கான நடைமுறை காரணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது 2011 இல் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை தொரடர்ந்து விளையாட்டு அமைச்சசு  குறித்த விசாரணையைத் தொடங்கியது.

இது தொடர்பாக முன்னாள் தலைவர்களான மகேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, அப்போதைய இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

விசாரணை தொடர்பான அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதாக எஸ்.எஸ்.பி ஜகத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற சிறப்பு புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பல்வேறு கிரிக்கெட் வீரர்களை வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பது நாட்டில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது ஒரு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் ஜகத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

"இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்று வாக்கு மூலங்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய 14 குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் பதிலளிக்கவில்லை. இது எந்த விசாரணையையும் கூட ஆரம்பிக்கவில்லை ’என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19