நியூயோர்க் நகரில் குண்டுவெடிப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

04 Jul, 2016 | 01:56 PM
image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள பூங்காவில் பாறைமீது ஏற முயன்ற இளைஞரின் கால் குண்டுவெடிப்பில் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா நகரை சேர்ந்த கன்னோர் கோல்டன்(18) என்ற கல்லூரி மாணவர் வோஷிங்டன் நகரில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து நியூயோர்க் நகரை சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.

 இன்று காலை சுமார் 11 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) நியூயோர்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் பூங்காவின் அழகை ரசித்தபடி அங்கிருந்த சிறிய பாறையின்மீது ஏறி, இயற்கை காட்சிகளை பார்க்க முயன்றபோது, திடீரென்று அந்த பாறைக்கு அடியில் இருந்த சிறியரக குண்டு வெடித்து சிதறியது.

இச்சம்பவத்தில் அவருடன் இருந்த ஒரு நண்பர் ஆறடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். கன்னோர் கோல்டனின் இடதுகால் முழங்காலுக்கு கீழே துண்டாகிப் போனது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் பொலிஸார் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.

மோப்ப நாய்களின் உதவியுடன் பூங்கா முழுவதும் குண்டு பரிசோதகர்கள் சோதனை நடத்தியதில் அங்கு வேறெந்த வெடிப்பொருளும் கிடைக்கவில்லை. ஒரு காலை இழந்த நிலையில் தற்போது நியூயோர்க்கில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கன்னோர் கோல்டனின் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று வானவேடிக்கை நடத்துவதற்காக யாரோ மறைத்து வைத்திருந்த வெடிப்பொருள் மீது கன்னோர் கோல்டன் கால் வைத்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47