விடுதலைப்புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த உத்தரவை வழங்குவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய தெரிவித்தார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தொடர்பில், மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை குறித்து, சட்ட மாஅதிபரிடமிருந்து எவ்வித ஆலோசனைகளும் கிடைக்காததால், அவர் மீதான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.