ஹோமாகமவில் மேலும் பல ஆயுதங்கள் மீட்பு

02 Jul, 2020 | 05:35 PM
image

(செ.தேன்மொழி)

ஹோமாகம - கெந்தலந்த பகுதியில் பாதாள குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதாளகுழுக்களின் செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளுக்கமைய, தெற்கு பாதாள குழுவொன்றுக்கு சொந்தமான 12 ரி - 56 ரக துப்பாக்கிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர். 

பொட்ட கபில என்ற பாதாளகுழு உறுப்பினர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கடந்த திங்கட்கிழமையே இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸார் மேலும் துப்பாக்கிகள் மறைத்து வைத்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரே முன்னெடுத்து வந்ததுடன், சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஹபரகட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன். அவரிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஹோமாகம - கெந்தலந்த பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலையே இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது 4 கைக்குண்டுகளும், கைத்துப்பாக்கி ஒன்றும், கல்கட்டஸ் ரக துப்பாக்கி ஒன்றும், இரண்டு டெட்டனேட்டர்கள், ரிபிட்டர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 10, ஒரு ஜோடி கைவிலங்கும், ரைபல் துப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்குள் 600 மற்றும் ரி.வி.ஆர். இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08