Huawei ஸ்ரீ லங்கா விநியோகஸ்த்தர் விருது ; 2 ஆவது தடவையாக iDealz தெரிவு

Published By: Priyatharshan

04 Jul, 2016 | 12:46 PM
image

Huawei தனது வருடாந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடலின் போது ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தருக்கான விருதைiDealz ஸ்ரீ லங்கா  நிறுவனத்தின் உரிமையாளர் அஹமட் ரிஸ்வி ரிஃவ்கான் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியீட்டியிருந்தார்.

இந்நிகழ்வு அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

“Huawei சாதனையாளர்கள் இரவு 2016” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, Huawei ஸ்ரீ லங்காவினால் அதன் நாடு முழுவதையும் சேர்ந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

“ஒரே இலக்கு ஒரே குடும்பம்” எனும் தொனிப்பொருளுக்கமைய தமது பங்களிப்பை வழங்கியிருந்த சுமார் 600 விநியோகஸ்த்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

Huawei ஸ்ரீ லங்கா மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்காவின் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

iDealz ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் அஹமட் ரிஸ்வி ரிஃவ்கான் தமக்குரிய விருதை சிங்கர் ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸிடமிருந்து பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்வில், Huawei ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுனில் வாங், இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரி ஹென்ரி லியு மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சியின் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் சந்தன சமரசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் Huawei சாதனங்களுக்கான தலைமை அதிகாரி ஹென்ரி லியு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் Huawei இரண்டாம் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த சாதனை கௌரவிக்கும் வகையில், Huawei ஸ்ரீ லங்கா தனது சிறந்த பத்து விநியோகஸ்த்தர்களுக்கு விருதுகளை வழங்கியிருந்தது. 

முதலாமிடத்துக்கு தெரிவாகியிருந்த ரிஃவ்கானுக்கு 65” Curved LED தொலைக்காட்சியும் பணப்பரிசும் வழங்கப்பட்டிருந்தது.

தமக்குரிய விருதை பெற்றுக் கொண்ட ரிஃவ்கான் கருத்து தெரிவிக்கையில்,

“எமது கடின உழைப்புக்கு கிடைத்த சிறந்த பரிசாக இது அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து நாம் அதிகளவு கவனம் செலுத்துகிறோம். இந்நிலையில் இது எமக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. Huawei இன் வளர்ச்சிக்கு iDealz பங்களிப்பு வழங்கியுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

2011 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த iDealz, வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் படைத்த தயாரிப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தமது சேவைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. இன்று iDealz இன் வெற்றிகரமான செயற்பாடு பற்றி முழு நாடும் அறிந்துள்ளது. 

“எமது சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை நாம் ஒன்லைனில் அதிகளவு முக்கியத்துவத்துடன் முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக Facebook ஊடாகவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

எமது Facebook பக்கத்தில் அதிகளவான ரசிகர்கள் காணப்படுகின்றனர். 150,000 க்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுவதுடன், நாம் இடும் ஒரு பதிவுக்கு 50000 like கள் வரை கிடைக்கிறது. இந்த ஆண்டு எமது ஒன்லைன் விற்பனைகள் எமது வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு வழங்கியுள்ளன” என்றார்.

“எமது வாடிக்கையாளர்கள் எமது காட்சியறைக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, எமது Facebook பக்கத்தினூடாக ஓடர்களை மேற்கொள்ளலாம். கொழும்பினுள் ஒரே நாளில் எம்மால் விநியோகத்தை மேற்கொள்ள முடியும். 

நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் 24 – 48 மணி நேரத்தினுள் விநியோகத்தை மேற்கொள்கிறோம். எமது துரித செயற்பாடுகளை அவர்கள் வரவேற்பதுடன் எமது செயற்பாடுகளில் நம்பிக்கையையும் வைத்துள்ளனர்” என்றார்.

இலகுவான அணுகலுக்காக, வாடிக்கையாளர்கள் iDealz ஐ அதன் ஹொட்லைன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் iDealz தொடர்ச்சியாக விற்பனையில் முன்னோடியாக திகழ்வதற்கு வாடிக்கையாளர்கள் குறித்து அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57