கொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: J.G.Stephan

02 Jul, 2020 | 11:48 AM
image

கொவிட் 19 ஐ விரைவாக அடையாளம் காண்பதற்கு முழுமையான பி.சி.ஆர். தன்னியக்க உபகரணம் ஒன்றை சர்வதேச றோட்டரிக் கழகம், அரச வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

பி.சி.ஆர். உபகரணம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (01.07.2020) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

முழுமையான தன்னியக்க புதிய பி.சி.ஆர். உபகரணத்தின் பெறுமதி இரண்டு கோடி இருபது இலட்ச ரூபாவை விடவும் அதிகமாகும்.

அதன்மூலம் ஆராய்ச்சிகளின்போது முகங்கொடுக்கும் மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முடியும் என்பது முக்கிய விடயமாகும்.

விரைவாகவும், துல்லியமாகவும் மற்றும் செயற்திறனை அதிகரிக்கவும் புதிய உபகரணத்தின் மூலம் முடியும் என்று வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் முகங்கொடுக்கக்கூடிய வேறு விதமான வைரஸையும் அடையாளம் காண்பதற்கு புதிய பி.சி.ஆர். உபகரணத்தை பயன்படுத்த முடியும்.

கொவிட் ஒழிப்புக்காக வைத்திய ஆய்வு உபகரணங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு றோட்டரிக் கழகம் 12 கோடி ரூபாவை  அன்பளிப்புச் செய்துள்ளது.

அதற்காக ஜனாதிபதி றோட்டரிக் கழக பிரதிநிதிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்ஹ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, வைத்திய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார, றோட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் செபஸ்தியன் கருணாகரன், முன்னாள் தவிசாளர் கே.ஆர்.ரவீந்திரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள தவிசாளர் புபுது த சொய்சா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும்  றோட்டரி கழகத்தின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04