விருப்புவாக்கு போட்டி தீவிரமடையும் நிலை - எச்சரிக்கிறது பெப்ரல்

01 Jul, 2020 | 08:42 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் விருப்புவாக்கு போட்டி தீவிரமடையும் நிலை இருக்கின்றுது. 

இதுதொடர்பில், பிரதான அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பெப்ரல் அமைப்பு ஐந்தாயிரம் உறுப்பினர்களை நாடுபூராகவும் நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது என, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

9ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. 

இம்முறை தேர்தலில் முக்கிய அம்சமாக கருதப்படுவது சுமார் 6மாத காலம் பிரசார நடவடிக்கைக்கு வழங்கப்பட்டிருப்பதாகும். மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

இருந்தபோதும் இந்த காலப்பகுதியில் இருந்து இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை.

கொவிட் 19 தொற்று நிலைமையில் இருந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்த கடந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து, ஜூலை முதலாம் திகதிவரை 229 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அதில் 114 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த முறைப்பாடுகளில் 10 தேர்தல் வன்முறை சம்பவங்களும் சட்டவிரோத தேர்தல் பிரசார சம்பவங்கள் 132, பொதுச் சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில், 17 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இந்த முறைப்பாடுகளில் அதிகமானவை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவில் அரசியல் தலையீடு இடம்பெறுகின்றமை தொடர்பிலாகும்.

மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை 230 சம்பவங்களும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பாக 236 முறைப்பாடுகளுமே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. பாரிய வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. 

இருந்தபோதும் எதிர்வரும் தினங்களில் அந்ததந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் விருப்புவாக்கு போட்டி தீவிரமடையும் நிலை இருக்கின்றது. இதுதொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளின்போது அரச அதிகாரிகள் எந்தவொரு கட்சிக்கும் சார்ப்பாக நடந்துகொள்ளக்கூடாது என, ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றினூடாக அறிவித்திருந்தார். 

ஜனாதிபதியின் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என தேடிப்பார்க்கவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். பாடசாலை அதிபர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டிருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. 

அவ்வாறு அரச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது விசேட அம்சமாக இருப்பது, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதாகும். 

கொவிட் 19 தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறும்வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தேர்தல் நடவடிக்கைகளின்போது பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல் அறிக்கையொன்றை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி கையளித்திருந்தார். 

என்றாலும், குறித்த சுகாதார வழிகாட்டல், வர்த்தமானிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டபோதும், இதுவரை சுகாதார அமைச்சு அதனை செய்யவில்லை. 

அதனால் இந்த வழிகாட்டல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதநிலை இருக்கின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58