தற்போதைய ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆட்சியில் தீர்வு - ராம்

01 Jul, 2020 | 08:34 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்நிலையில் தங்களது  ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட வேட்பாளர் சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

இதேவேளை சிங்கள மக்களும், தமிழ்பேசும் மக்களும் ஒற்றுமையாகவும் , சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். 

ஐக்கிய தேசியக் கட்சியிலிருக்கும் போதும் இதே எண்ணத்திலேயே செயற்பட்டோம். ஆனால் ஐ.தே.க. எம்மை  நிராகரித்து விட்டுள்ளது. அதனாலேயே சஜித் பிரமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் இன்று ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாங்கள் விலகவில்லை. ஐ.தே.க.தான் எங்களை விலக்கியுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக பல சவால்களுக்கு மத்தியில் நாங்கள் செயற்பட்டிருந்தோம். 

40 வருடகாலமாக  கட்சிக்காக உழைத்துள்ளேன். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டணி அமைக்க கட்சியின் செயற்குழுவே அனுமதி வழங்கியிருந்தது. தற்போது அதனை அவர்கள் மறுத்து வருகின்றார்கள்.

கடந்த நான்கரை வருடங்களாக ஐ.தே.க.வின் அரசாங்கம் ஆட்சியிலிருந்த போதிலும் கட்சியின் ஆதரவாளர்களுக்காக எந்தவித பயன்தரும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. யானை சின்னத்தில் நாங்கள் பலதடவை போட்டியிட்டுள்ளோம். தற்போது யானை சின்னம் இல்லாவிட்டாலும் மக்கள் மத்தியில் எமக்கு வரவேற்புவுள்ளது.

சிங்கள மக்களும், தமிழ்பேசும் மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதனையே நாங்கள் விரும்புகின்றோம். இந்நிலையிலேயே நாங்கள் சஜித் பிரமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்துள்ளோம். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். 

இதனால் எமது அரசாங்கத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயக மூர்த்தி கூறியதாவது,

மின் கட்டணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டணங்கள் வழமைக்கு மாறாக பல மடங்கு அதிகரித்துள்ளன. மூன்று மாத்துக்கான கட்டணங்களும் ஒரே தடவையில் வந்திருப்பதனால் அதன் தொகை அதிகரித்துள்ளதுடன், கடந்த மூன்று மாத காலங்களில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்ததனால் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வழமைக்கு மாறாக மின்சார பாவனையும் அதிகரித்துள்ளது. இதற்கமையவும் கட்டணத்தொகை அதிகரித்திருக்கலாம். ஆனால் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை மின் கட்டணங்களை அளவிடும் போதும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வழமைக்கு மாறாக மின் கட்டணத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தோன்றினால் மின்சார சபைக்கு அது தொடர்பில் அறிவித்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளமுடியும். 

இதேவேளை மூன்று மாத கட்டணங்களையும் ஒரே தடவையில் செலுத்தும்போது பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதினால், அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு மாத கட்டணத்தை விடுத்து இரு மாதங்களுக்குறிய கட்டணங்களை மாத்திரம் அறவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிகாலத்தில் வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களின், மின் கட்டணங்களுக்கு மாத்திரம்  தீர்வினை பெற்றுக் கொடுக்காது, அவர்களின் அனைத்து பொருளாதார பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்று கொடுப்போம். இதனை கட்சித் தலைவரும் பலதடவை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58