கொரோனாவால் மணமகன் மரணம் : திருமணத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 01:30 PM
image

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கொரோனா தாக்கத்தால் மணமகன் உயிரிழந்துள்ளதுடன் குறித்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள  பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி திருமணம் இடம்பெற்றது.

திருமணம் நிறைவடைந்து இரண்டு நாட்களில் மாப்பிள்ளை திடீரென்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

இறந்த மணமகன் திருமணத்திற்காக தனது சொந்த  கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்துள்ளது.

கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50 க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13