கருணா அம்மான் பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடாது ; ஓமல்பே சோபித தேரர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

30 Jun, 2020 | 09:53 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மானை நீக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கருணா அம்மான் விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்திய ஆயுத படைகளின் தலைவராக இருந்துகொண்டு அவர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பாக அவரின் நாவினாலே தெரிவித்திருந்தார். 3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டிருக்கின்றோம்.

அத்துடன் கருணாவின் கூற்றின் மூலம் பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் பாராளுமன்ற சட்டத்தின் 81 ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது. அதனால் உடனடியாக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கவேண்டும் என தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றோம். 

கொலை குற்றச்செயலை செய்ததாக உறுதி மொழி வழங்கும் கருணா அம்மானுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அனைவரும் இதுதொடர்பில் பொறுப்பு கூறவேண்டும். அதேபோன்று தற்போது கருணாவை தூய்மைப்படுத்த சில அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08