மஹிந்த தரப்புக்கு முஸ்லிம்களின் வாக்குகளும் கிடையாது பிரியாணியும் கிடையாது - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 3

30 Jun, 2020 | 08:43 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹிந்த தரப்புக்கு இனியொருபோதும் முஸ்லிம் வாக்குகளும் கிடைக்காது, பிரியாணியும் கிடைக்கப்போவதில்லை என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

வெல்லம்பிட்டி, மெகட கொலன்னாவ பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நேற்று முன்தினம் தெஹிவளையில் முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில், தனக்கு புரியாணி கிடைத்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேசியிருந்தார். 

மஹிந்த ராஜபக்ஷ் ஒருவிடயத்தை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், கடந்த காலங்களில் புரியாணியாவது கிடைத்தது, இனிவரும் காலங்களில் அதனையும் எதிர்ப்பாக்க வேண்டாம் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும். 

ஏனெனில்,  சர்வதேச ரீதியில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு ஒழுங்கு விதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தாலும் இந்நாட்டில் பலவந்தமாக முஸ்லிம்கள் மீது அதிகாரம் தினிக்கப்பட்டது.

இதனால் முஸ்லிம்கள் மன உலைச்சலுக்கு ஆளாகினர். முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் அவை புறக்கணிக்கப்பட்டன. இந்நாட்டில் வேண்டுமென்றே முஸ்லிம்கள் நசுக்கப்பட்டனர். 

எனவே முஸ்லிம் மக்கள் தங்களது கவலையை தீர்த்துக்கொள்ள இந்த தேர்தலை பயன்படுத்துவார்கள். அதனால் மஹிந்த ராஜபக்ஷ் எதிர்பார்க்கும் புரியாணியும் கிடைக்காது வாக்கும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04