அதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

30 Jun, 2020 | 07:58 PM
image

(செ.தேன்மொழி)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் , அரசாங்கத்திற்கு ஆதவளிப்பதா ? இல்லையா ? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டி ஏற்படும் என்று அதிபர் , ஆசிரியர் ஒற்றுமை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிபர் , ஆசிரியர் ஒற்றுமை சங்கத்தினர் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்திலே மேற்கண்டவாறு கூறியுள்ள அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

கொவிட் - 19 வரைவஸ் பரவலுக்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டிய பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தமை இரகசியமல்ல. இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டு பல்வேறு ஆர்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வைரஸ் பரவல் காரணமாக அவை தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளன.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியமை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதுடன், தீர்வுகாணப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு இதுவரையிலும் தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டு , பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொடுக்குமாறு நீங்கள் முன்வைத்து வரும் கோரிக்கைக்கு எங்களால் இணக்கம் தெரிவிக்க முடியாது.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் காணப்படும் அதிபர் , ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் சேவை தொடர்பில் காணப்படும் சட்டவிதிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருந்தங்களையும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றவேண்டும்.

அரச நிர்வாக பிரிவின் 2016 -03 சுற்று நிரூபத்தினால் வழங்கப்பட்டிருந்த ஊதியத்தை , 2016-2020 ஆகிய காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி பின்னர் நிறுத்திவைத்தமை தொடர்பிலும் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் எமக்கு அறிவிக்காவிட்டால் , தேர்தலின் போது அரசாங்கத்திற்கு ஆதவளிப்பது தொடர்பிலும் சிந்தித்து பார்க்கவேண்டி ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56