கொழும்பில் துப்புரவு செய்யப்படாத வடிகான்களால் நுளம்பு பெருகும் நிலை ; மக்கள் விசனம் 

Published By: Priyatharshan

04 Jul, 2016 | 10:52 AM
image

கொழும்பின் வடபகுதியில் பல இடங்களிலும் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையால் நுளம்புகள் பெருகும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பு வடக்கு காக்கைதீவு பகுதியில் வடிகான்கள் துப்புரவு செய்யப்படாத நிலை காணப்படுவதாகவும் இதனால் நுளம்புகள் பெருகுவதால் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவுவதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதாகவும் நுளம்புபெருகுவதை கட்டுப்படுத்த மருந்துகளை விசிறிவிட்டு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் குறித்த வடிகான்களில் கழிவுநீர்கள் தேங்கியுள்ள நிலையில் அதனை துப்புரவு செய்வதற்கு எந்தவொரு அதிகாரிகளும் முன்வரவில்லையென்றும் தாம் அதனை துப்புரவு செய்தாலும் அது பலனளிக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில், கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடனும் தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர். விஜேமுனி தெரிவித்திருந்தார்.

குளிர்சாதனப் பெட்டியிலுள்ள தட்டுகளில்  நுளம்புகள் முட்டையிட்டு பெருக்கம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை சுத்தமாக வைத்திருக்குமாறும் டெங்கு நுளம்புகள் அதிகம் பரவும் இடங்களாக கிருலப்பணை, கிருள வீதி, பாமன்கடை, நாரஹேன்பிட்டி,வெள்ளவத்தை, மிலாகிரிய, முகத்துவாரம், வனாத்தமுல்ல, தெமட்டகொடை போன்ற பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/8187

                                    http://www.virakesari.lk/article/8392

                                   http://www.virakesari.lk/article/8339

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32