அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - ஆளும் கட்சி

Published By: Digital Desk 3

29 Jun, 2020 | 05:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எம். சி. சி ஒப்பந்ததை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.  நல்லாட்சி  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த  திட்டங்கள் அனைத்தும் தற்போது  பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பான  விசாரணைகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் பொதுத்தேர்தலின் வெற்றியை இலக்காகக்கொண்டு   தற்போது  எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு அறிக்கையினை வெளியிட்டிருப்பதாக  எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எம். சி. சி ஒப்பந்தத்தை வைத்து  தற்போது அரசியல் செய்ய  வேண்டிய தேவை  அரசாங்கத்துக்கு கிடையாது.  ஒப்பந்தத்தின் பாரதூரமான விடயங்களை  எதிர்ககட்சி பதவி வகிக்கும் போது மக்களுக்கு  தெளிவுபடுத்தியுள்ளோம்.

எம். சி. சி ஒப்பந்தத்தின் மீளாய்வு அறிக்கையில் பல்வேறு உண்மை தன்மைகள் வெளிவந்துள்ளன.

இரகசியமான முறையில்  ஐக்கிய தேசிய கட்சி   நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த  திட்டங்கள் தற்போது வெளிவந்துள்ளன.   கிடைக்கப் பெற்றதாக குறிப்பிடப்படும் நிதி தொடர்பில் உரிய  விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

மீளாய்வு அறிக்கையின் உள்ளடக்கம் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே  மக்கள்  இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுப்பார்கள். 

அரசியல் சூழ்ச்சி,   பிறர் மீது   சேறுபூசல் ஆகியவற்றை முன்னெடுத்து ஆட்சியை   கைப்பற்றுவது பலவீனமான அரசாங்கத்தையே  தோற்றுவிக்கும்.   நாட்டுக்கு  பொருந்தும் வகையில்  கொள்கைத்திட்டங்களை வகுத்துள்ளோம்.

அடுத்த மாதம் முதல்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பொதுஜன பெரமுன இம்முறை  அதிகளவில்    கூட்டங்களை நடத்தாது. இணையத்தள வழிமுறைகளின் ஊடாக  தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவே  அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51