இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பணவியல் ஆணையம் புதிய ஆளுநரின் நியமனத்தின் பின் பொதுநம்பிக்கையை மீட்க உதவுவதுடன் அவரது 6 ஆண்டு சேவைக்காலத்தில் இலங்கை வர்த்தக சம்மேளனம் அவரது முழு ஆதரவையும் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை,  நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உறுதிப்பாடு, சுபீட்சம் நோக்கிய புதிய மத்திய வங்கியின் ஆளுநரின்  முயற்சிக்கு  அனைத்து பங்குதாரர்களும் அதரவு வழங்க வேண்டுமென இலங்கை வர்த்தக சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் 6 ஆண்டு சேவைக்காலத்திற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று காலை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.