விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்..!

Published By: J.G.Stephan

28 Jun, 2020 | 11:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படமாட்டாது. ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் வருகைக்காகவும், இதர சேவைகளுக்காகவும் விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளார்கள்.

 வெளிநாடுகளில் தொழில் புரியும்   50000ம் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கு  தூதரகத்தின் ஊடாக பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கொள்கையாகும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், நாட்டில்  தற்போது உள்ளோர் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையினை அரசாங்கம் மிகவும், அவதானத்துடனும், பொறுப்புடனும் கையாள்கிறது.

 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை எதிர்பார்த்தோம். ஆனால், சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்க அமைய தீர்மானம் காலதாமதமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயிலும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளோம்.

 சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான பிரதான மார்க்கமாகும். நாட்டுக்கள் வரும்  சுற்றுலா பிரயாணிகள் தங்களின் நாட்டில் முதலில் பி. சி. ஆர். பரிசோதனையை செய்து அறிக்கையினை  சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அவர்கள் எமது நாட்டுக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும். 

பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரையில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். சுற்றுலாத்துறை சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா  ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே சுற்றுலா பிரயாணிகள் தங்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51