பொலிஸ் அதிகாரியென தன்னை அடையாளப்படுத்தி சட்டவிரோதமாக பணம் சேகரித்த  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை உட்பட பல இடங்களில் தன்னை பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரி என தெரிவித்து பணம் சேகரித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் கொழும்பு மவுன்ட் லாவின்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.