எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?: லலித சமர்ப்பித்த அறிக்கை பெறுமதியற்றது - ரணில் 

Published By: J.G.Stephan

28 Jun, 2020 | 11:59 AM
image

  (இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம்  எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் தனது   நிலைப்பாட்டை  நாட்டு மக்களுக்கும், அமெரிக்காவுக்கும் அறிவிக்க வேண்டும். லலித ஸ்ரீ  குணருவன்  சமர்பித்துள்ள அறிக்கை  பெறுமதியற்றது என்றே  குறிப்பிட வேண்டும்  என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சேதவத்த விகாரையில் மதவழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  எம். சி.  சி. ஒப்பந்தம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. ஒப்பந்தத்தின் முதலிரண்டு பகுதிகளும் 2017. மற்றும் 2018ம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்டு  அதற்கு 10 மில்லியன்  அமெரிக்க டொலர் நிதி முதற்கட்டமாக கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டதாக  குறிப்பிட்டுள்ளதை தவறானதாகும்.

எம். சி. சி ஒப்பந்தத்தை தொடர்புப்படுத்தி எவ்வித நிதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை  அமெரிக்க  தூதரம் நிராகரித்துள்ளது. எவ்வித நிதியும் கிடைக்காதபோது எவ்வாறு நிதி மோசடி செய்வது.

ஒப்பந்தம் தொடர்பில்  ஆய்வினை மேற்கொண்ட லலித ஸ்ரீ குணருவன் சமர்ப்பித்துள்ள  அறிக்கை பெறுமதியற்றது. என்றே குறிப்பிட வேண்டும் ஆகவே ஒப்பந்தம்  தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை  ஆகவே அரசாங்கம்  மக்களுக்கும்,  அமெரிக்காவுக்கும்  உண்மை நிலையினை அறிவிக்க  வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47