மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை !

Published By: Jayanthy

27 Jun, 2020 | 01:21 PM
image

கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சினால்  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளைமுதல் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம், பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,  உரிய சுகாதார முறைமைகளை கையாளாத அனைவரையும்,  நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை மீறியதாக அச்சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம், 3 ஆம் கட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. இந்நிலையில், கட்டம் கட்டமாக நாடு வழமைக்கு திரும்பிவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படும் பட்சத்தில்  அதனை கட்டுப்படத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58