ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவுவேளையில் சுமார் 300 மாணவிகள் தங்கியிருந்த கட்டிட பகுதிக்குள் திருடனொருவன் புகுந்தமையாலே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்குமிடம் நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்டுள்ளதோடு, குறித்த கட்டிடத்திற்குள் புகுந்த திருடன், மாணவிகளின் 8 கையடக்க தொலைபேசிகளை திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த தங்குமிடத்தின் ஜன்னல்களை உடைத்தே கள்வன் உள்நுழைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவன், மாணவிகளுக்கு எவ்வித தொந்தரவுகளை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த திருடனை கண்ட மாணவியொருவர், திடீரென்று எழுந்து கூச்சலிட குறித்த திருடன் தப்பிச்சென்றுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்துள்ளதோடு,அவர் உறக்கத்தில் இருந்தமையால் அவரால் கள்வனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.