கொரோனாவுக்கு இந்திய ஊடகவியலாளர் வேல்முருகன் பலி !

Published By: Digital Desk 3

27 Jun, 2020 | 12:24 PM
image

கொரோனா பாதிப்பு காரணமாக ,இந்திய தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரான வேல்முருகன் என்பவர்  உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் ஊடகவியலாளர் இவர்.

தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

இவர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று சென்னையில் கால் பதித்ததுமே முன்களப் பணியாளர்கள் பலருடன் ஏராளமான பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் பலர் நலன் பெற்று வீடு திரும்பினர்.

தமிழகத்தில் நேற்று 3645 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 74,622 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மாத்திரம்  46 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 957 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47