தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் பலமாக இருக்க வேண்டும் - நடனேந்திரன்

26 Jun, 2020 | 08:58 PM
image

வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும் அந்தப் பலத்தை நாம் இழப்போமானால் ஜனாதிபதி கோத்தபய தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டக்கான இனப்பிரச்சினை தீர்வையே அபிவிருத்தியையே செய்யாது காலத்தைக் கடத்தும் ஒரு நிலையை ஏற்படுத்திவிடுவார்கள் ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில்ந டைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசியக் கூடட்டமைப்பு பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக இருக்கவேண்டும் ஆனால் அந்தப் பலத்தை உடைப்பதற்காக பல கட்சிகளும் சுயோட்சைக்குழுக்களும் போட்டிபோடுகின்றார்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு கட்சிகளுக்கு ஏதாவது கொள்கைகள் அல்லது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பது தொடர்பில் நிலைப்பாடுகள் இருக்கின்றதா? அது பற்றி ஏதாவது கூறியிருக்கின்றார்களா? இதனை உங்களைச் சந்திக்க வருபவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும் தேர்காலத்தில் மட்டும் வாக்குக்கேட்டு வருபவர்கள் இதுவைரயும் எங்கு இருந்தார்கள் யார் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறாரக்ள் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்ற கேள்விகளை கேளுங்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதிநிலைக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் தான் பல குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டது. இறுதி நேரத்தில் கொண்டு வரப்பட்ட முயற்சிகள் மீளவும் ஆரம்பிப்பதற்கும் சம நேரத்தில் அபிவிருத்தி முயற்சிகளை தொடர்ந்து செய்வதற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும் எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலமான சக்தியாக இருப்பதற்கு கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்

இன்று இலங்கை சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் ஒருமித்து இருக்கின்றோம் என்ற தகவல் சர்வதேசத்திற்கும் எடுத்துக்கூறவேண்டும். எங்களுக்கு இருக்கின்ற சர்வதேச சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அரசில் தீர்வு அபிவிருத்திகளையும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வதற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பபை பலப்படுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21