கருணா, எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் மௌனம் சாதிக்காது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் - ஹர்ஷன ராஜகருணா 

Published By: Digital Desk 3

26 Jun, 2020 | 07:09 PM
image

(செ.தேன்மொழி)

கருணா அம்மான் தொடர்பான சர்ச்சையிலும் , எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பிலும் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்காது அதன் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஹர்சன ராஜகருணா , தற்போதைய அரசாங்கம் தேர்தல் பிரசார காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை தேர்தல் முடிவுகளின் பின்னர் மறந்து விடுவதால் , பொதுத் தேர்தலுக்கு முன்னரே இந்த விவகாரங்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இன , மதவாதத்தை போதிப்பதன் ஊடாகவே அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொண்டது. தற்போது பொதுத் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்தகாலங்களிலே அடிப்படைவாதிகள் என்று இவர்கள் அடையாளப்படுத்தியவர்களுடனேயே தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளனர். அடிப்படைவாதத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறி வரும் ராஜபக்ஷாக்களுடன் சிங்கள , தமிழ் மற்றும் முஸ்லீம் அடிப்படைவாதிகள் என்றுக் கூறப்படும் பலரே கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதி சஹ்ரானுக்கு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்டிருக்கும் முன்னாள் கிழக்குமாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா யாருடன் இருக்கின்றார்? இதேவேளை தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தரான முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் யாருடன் இருக்கின்றார்? இந்த விடயங்கள் தொடர்பில் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கருணா அம்மான் தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழ் மக்கள் முன்னிலையில் தான் விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக செயற்பட்ட காலத்தில் 2000-3000 வரையான இராணுவ வீரர்களை கொலைச் செய்ததாக பெருமையுடன் கூறியிருந்தார். தமிழ் மக்கள் முன்னிலையில் தன்னை ஒரு வீரரான சித்தரித்து வாக்குகளை சுவீகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இவரும் ராஜபக்ஷாக்களின் முகாமின் ஒரு  உறுப்பினரே. இதேவேளை ராஜபக்ஷாக்கள் தெற்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தாங்களே விடுதலை புலிகள் இயக்கத்தை அழித்ததாக பெருமை கொள்கின்றனர். தமிழ் மக்கள் முன்னிலையில் ஒரு கருத்தும் சிங்கள மக்கள் முன்னிலையில் இன்னுமொரு கருத்தையும் தெரிவித்து இனவாதத்தை பரப்பியே வாக்குகளை வென்றெடுக்க முயற்சித்து வருகின்றார்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருணாவின் விடயத்தில் தொடர்ந்தும் அமைதிகாப்பதை நிறுத்திவிட்டு பொதுத் தேர்தலின் பின்னர் கருணாவிற்கு அவர்களது கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொடுப்பார்களா? அல்லது தேர்தலின் பின்னர் அவருக்கு அமைச்சு பதவியை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருக்கின்றார்களா ? என்பதை  தேர்தலுக்கு முன்னர் தெளிவுப்படுத்த வேண்டும். அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு எந்தவித சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க தவறியுள்ளது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் அதற்கான பயன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் தாங்கள் எவ்வாறு செயற்பட்டாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இருக்கின்றது.

எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்கள் இந்த ஒப்பந்தம் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது எம்.சி.சி.யை நிராகரிப்பதாக அறிவித்த இவர்கள். பொதுத் தேர்தலுக்கு முன்னர் அது தொடர்பான  நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார்களா ? இல்லையா? என்பதை தெளிவாக விளக்கவேண்டும். இந்த அரசாங்கம் தேர்தல் பிரசார காலங்களில் வழங்கும் வாக்குறுதிகளை அவர்களின் ஆட்சிகாலங்களில் செயற்படுத்துவதில்லை.

கேள்வி : உங்களது தலைமை காரியாலயத்தில் காணப்படும் கட்சி தலைவரின் புகைப்படத்தை நீக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுதானே , நீக்க வில்லையா?

பதில்: ஆம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது காரியாலயம் அமைந்துள்ள இதே வீதியில் இன்னும் இரு கட்சிகளின் தேர்தல் காரியாலயங்கள் இருக்கின்றன. ஆனால் அவைத் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. அங்கும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் இருவரின் புகைப்படங்ள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எமது கட்சி தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் தொடர்பில் மாத்திரம் இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளமை வியப்பளிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08