தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் அதற்கு சார்பாக இருக்கமாட்டேன் - பிரபாகணேசன்

26 Jun, 2020 | 04:56 PM
image

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக அரசாங்கம் சார்பாக இருக்கமாட்டேன். எனக்கு அரசாங்கத்தை விட எமது தமிழ் மக்கள் தான் முக்கியம் என ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான க.பிரபாகணேசன் தெரிவித்தார். 

இன்று வவுனியா தரணிக்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, 

கருணா அம்மான் தொடர்பான சர்ச்சை தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு நான் கொள்கை உடையவனாக இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக இந்த அரசாங்கம் சார்பாக இருக்கமாட்டேன். 

எனக்கு அரசாங்கத்தை விட எமது தமிழ் மக்கள் தான் முக்கியம் என்பதை இந்த இடத்திலே தெரிவித்து கொள்கின்றேன்.

அதேபோல், கருணா அம்மான் பிரச்சினையை பொறுத்தவரை கருணா எங்களது இயக்கத்தின் பிளவுக்கும், இயக்கத்தின் தோல்விக்கும் தோல்வியல்ல. 

நான் சொல்லப்போகிறேன் இயக்கத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்தவர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே அவர் இன்று அரசியலுக்காக தான் ஒரு வீர மகன் என்பதை வெளியே காட்டுவதற்காக ஒரு உணர்ச்சிவசப்பட்டு பேசிய அந்த  வார்த்தைகள் பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது.

ஆகவே, இன்று நல்லிணக்கமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலே இப்படியான இனத் துவேஷங்களை உருவாக்கக்கூடிய இப்படியான சொற்பதங்கள் பாவிப்பதனை நிச்சயமாக அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மிலேனியம் சவால் உடன்படிக்கையை  பொறுத்தவரையிலே கடந்த அரசாங்கம் அதனை ஆரம்பித்து வைத்திருக்கிறது. ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இன்றைய அரசாங்கம் கைச்சாத்திட இருக்கிறார்கள். 

பல திருத்தங்களை கொண்டுவர இருப்பதாக கூறுகின்றார்கள். நாட்டின் இறையாண்மைக்கு தகுந்த முறையில் என்னென்ன திட்டங்களை அவர்கள் போடுகின்றார்கள் என்பதை பொறுத்துதான் நிச்சயமாக இதைப் பற்றி எனக்கு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுக்க முடியும்.

உண்மையிலே என்னுடைய அரசாங்கம் வரும்பொழுது எனது வெற்றிக்கு பின்பு, நிச்சயமாக இந்த மக்களின் அவலங்களை முழுமையான முறையிலே தீர்த்து வைக்கக்கூடிய ஒரு முழுமையான திட்டத்தை நான் கொண்டிருக்கின்றேன். ஆகவே நான் எங்கே சென்றாலும் மக்கள் எனக்கு ஆரவாரமாக என்னை வரவேற்கிறார்கள். 

எந்த ஒரு கூட்டத்தை நான் ஏற்படுத்தினாலும், அங்கே இருக்கும் தாய்மார்கள் என்னை ஒரு பிள்ளையாக பார்க்கின்றார்கள். அங்கே இருக்கும் சகோதரிகள் என்னுடைய சகோதரனாக வரவேற்கிறார்கள். ஆகவே எனது வெற்றியின் பின், நிச்சயமாக என்னை நம்பி இருக்கும் இந்த வன்னி மாவட்ட மக்களுக்கு முழுமையான முறையிலே சேவையை செய்வேன் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27