அடிப்படைவாதிகள் , இனவாதிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க ஆதரவு வழங்குங்கள் - பிவிதுறு எஹல உறுமய

Published By: Digital Desk 3

26 Jun, 2020 | 04:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அடிப்படைவாதிகள், இனவாதிகளது ஆதரவு இல்லாமல்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  பாராளுமன்றத்தில்  நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.   என பிவிதுறு எஹல உறுமய அமைப்பின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலத்தில் இன்று  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம் பெறவுள்ளபொதுத்தேர்தல்  பல  அடிப்படை  பிரச்சினைகளுக்கு  தீர்வை  பெற்றுக்கொடுப்பதாக அiமையும். சிங்கள  தலைவர் ஒருவரை  தெரிவு செய்ய வேண்டும் என்ற  நோக்கம் இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஊடாக  நிறைவேறியுள்ளது.  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு    தமிழ் , முஸ்லிம் சமூதாயத்தினர் ஆதரவு    வழங்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதி  அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்  தலைவராக  செயற்படுகிறார்.

அடிப்படைவாதிகளும்,   இனவாதிகளும் கடந்த  அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தினார்கள். ஒரு  தரப்பினரது சுயநல செயற்பாடுகளினால்    ஒட்டுமொத்த மக்களும் கடந்த காலங்களில்  பல நெருக்கடிக்குள்ளானார்கள். இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்பட கூடாது.

நாட்டை பிரிக்கும் எண்ணம் கொண்டவர்களும், அடிப்படைவாத போக்கினை  உடையவர்களும் புதிய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த  கூடாது  ஆகவே  இனவாதிகளின் ஆதரவு இல்லாமல்     பாராளுமன்றத்தில்  நிலையான  அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதற்கு  பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும்.

கருணா அம்மான் குறிப்பிட்ட  கருத்து முற்றிலும் தவறானது.     இராணுவத்தினரது உறவுகளின் உணர்வுகளை மீண்டும்  நகைப்புக்குள்ளாக்கியுள்ளார். இவ்வாறான   கருத்துக்களை இனி   இவர் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.   தேசிய   பாதுகாப்பினை   உறுதிப்படுத்தியதற்கு இராணுவத்தினர் மாத்திரமே   பெருமைப்பட்டுக் கொள்ள  வேண்டும்.

மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை  தொடர்பில்  தன்னிடம் குரல் பதிவு  உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநாயக்க  குறிப்பிட்டுள்ளார்.   அவ்வாறு குரல் பதிவுகள் இருக்குமானால் அவற்றை  பகிரங்கப்படுத்த  வேண்டும்.   மத தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27