இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

26 Jun, 2020 | 01:47 PM
image

இலங்கையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களில், 7 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 4 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்தும், 3 பேர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலிருந்தும், 2 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும், ஒருவர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும்  பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,619 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,010 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 380 பேர் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில்  தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 36 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51