பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமையவுள்ள முதலாவது இந்து ஆலயம்

Published By: Jayanthy

25 Jun, 2020 | 09:42 PM
image

பாக்கிஸ்தான் தலைநகரில் வசிக்கும் இந்துக்களின் வழிப்பாட்டுக்காக இந்து ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க இன்று அடிக்கல் நாட்டுப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாக்கிஸ்தானில் அதன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமையவுள்ள முதல் இந்து ஆலயம் இதுவாகும். 

Islamabad, Pakistan, Hindu temple, crematorium

அந்நாட்டு மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மல்ஹியின் தலைமையில் ஸ்லாமாபாத்தின் எச் -9 செக்டர் பகுதியில் குறித்த ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றுள்ளது. 

இதன் போது, கடந்த இரண்டு தசாப்தங்களாக தலைநகரில் இந்து மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருவதாகவும், அவர்கள் வழிபட ஒரு கோவிலை உருவாக்குவது முக்கியமானது என்றும் லால் சந்த் மல்ஹியின் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 20,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இவ் ஆலத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்று இஸ்லாமாபாத் இந்துக்கள் சபையால் பெயரிடப்பட்டுள்ளது. 

இவ் ஆலயம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், இந் நகரில் வாழும் இந்துக்கள் தகனம் தவிர்ந்த ஏனைய மதசடங்குகளை குறித்த நகரத்திலேயே மேற்டிகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதன மேம்பாட்டு ஆணையம், (சி.டி.ஏ) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி 2017 ஆம் ஆண்டில் இந்து ஆலயத்திற்கான காணியை ஒதுக்கியுள்ள நிலையில் இந்த கட்டுமானத்திற்கான செலவை (குறைந்தது பாகிஸ்தான் நாணயமதிப்பில் 100 மில்லியன்)  பாகிஸ்தான் அரசு ஏற்கும் என்றும் மத விவகார அமைச்சர் பிர் நூருல் ஹக் காத்ரி கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52