பயிற்றுனர் பதவிக்கான நியமனக்கடிதங்களை வழங்குங்கள் - வேலையில்லா பட்டதாரிகள் மகஜர்

25 Jun, 2020 | 07:37 PM
image

(ஆர்.விதுஷா)

பயிற்றுனர் பதவிக்கான நியமனக்கடிதங்களை  வேலையில்லாப்பட்டதாரிகளுக்கு  வழங்குமாறு  கோரி  ஒன்றிணைந்த  வேலையில்லா  பட்டதாரிகள்  சங்கம்  இன்று வியாழக்கிழமை   ஜனாதிபதி  செயலகத்தில்  மகஜரொன்று  கையளித்துள்ளது.

இந்த  மகஜரை ஒன்றிணைந்த   வேலையில்லா  பட்டதாரிகள்  சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  தன்னே ஞானானந்தே  தேரரிக்  தலைமையிலான குழுவினர் கொழும்பு  கோட்டை  புகையிரத நிவைலயத்திலிருந்து  ஜனாதிபதி  செயலகம்  வரை ஊர்வலமாக சென்று ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தனர்.

அந்த  மகஜரில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

வேலையில்லா  பட்டதாரிகளில் அரச  நிர்வாகத்துறை  அமைச்சின்   பயிற்றுனர்  பதவிக்கான  நியமனங்கள்   வழங்குவதற்கான நடவடிக்கையினை  ஜனாதிபதி  செயலகம்  மேற்கொண்டிருந்தது.  இருப்பினும்  அதிலும்  பல்வேறு  குறைப்பாடுகள்  காணப்பட்டன.  ஆகவே,  அந்த  குறைபாடுகள்  தொடர்பில்   பல  தடவைகள்  உரிய  தரப்பினருக்கு  எடுத்துரைத்திருந்தோம்.  ஆனால்எத்தகைய  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படவில்லை.  பொதுத்தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில்  இந்த  பிரச்சினை  மேலும்  வலுவடைந்துள்ளதே  தவிர  இன்னமும்   முடிவுக்கு  வரவில்லை.

சில  பட்டதாரிகளுக்கு   நியமனக்கடிதங்களும்  வழங்கப்படவில்லை  பெயர்ப்பட்டியலில்  பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை,  மேலும்  சிலருக்கு  ,  பெயர்  பட்டியலில்  பெயர்  குறிப்பிடப்படாதிருந்த  போதிலும்   நியமனக்கடிதம்  வழங்கப்பட்டுள்ளது,   அதேவேளை  சிலருக்கு  நியமனக்கடிதங்கள்    வழங்கப்பட்டுள்ள போதிலும்    பெயர்ப்பட்டியலில்  பெயர் இல்லை.  இவ்வாறான  குறைபாடுகள்  தொடர்பில்  கவனம்  செலுத்த  வேண்டியது  அவசியமானதாகும்.  

பொதுத்தேர்தல்  இடம் பெறவுள்ளது. இந்நிலையில் இந்த  நியமனங்களை இரத்து  செய்துள்ள  தேர்தல்கள்  ஆணைக்குழு  நியமனங்கள்   தொடர்பான  ஏனைய  நடவடிக்கைளை   ஆகஸ்ட்  மாதம்   10  ஆம் திகதிக்கு  பின்னர்  மேற்கொள்ளுமாறு    அறிவித்துள்ளது.   ஆகவே  ,  இவ்விவகாரம்  தொடர்பில்   நாம்  சுட்டிக்காட்டியிருக்கும்   குறைபாடுகளை  நிவர்த்தி செய்வதுடன், நியமனங்கள்  வழங்கப்படாத  பட்டதாரிகளுக்கான  நியமனங்களை  வழங்குமாறும்  கேட்டுக்கொள்கின்றோம் . அதேவேளை ,    இவ்விவகாரம்  தொடர்பில்  கலந்துரையாடலொன்றையும்  எதிர்பார்த்திருக்கின்றோம் என  அந்த  கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36