தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிபந்தனைகளால் வேட்பாளர்களுக்கு நெருக்கடி - சரத் வீரசேகர  

Published By: Digital Desk 3

25 Jun, 2020 | 04:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் பிரச்சாரம் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழு விதிக்கும் நிபந்தனைகள்  வேட்பாளர்களுக்கு    நெருக்கடியினை  ஏற்படுத்தியுள்ளது. 

வேட்பாளர்களுக்கு  நன்மை  பயக்கும் விதத்தில் எவ்வித  தீர்வினையும் ஆணைக்குழு இதுவரை வழங்கவில்லை என   அட்மிரல்  சரத் வீரசேகர   குற்றஞ்சாட்டினார் .

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று இடம்  பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலுக்கு  இன்னும்  ஒரு மாத  காலம் மாத்திரமே உள்ளது. இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் 7452  வேட்பாளர்களின்    விபரங்கள் வாக்காளர் மத்தியில் சென்றடைந்துள்ளதா என்ற   சந்தேகம்   காணப்படுகிறது. 

பொதுத்தேர்தலுக்கான   தேர்தல் பிரச்சாரங்கள் தொடபில் தேர்தல் ஆணைக்குழு  விதிக்கும்   நிபந்தனைகள்  அடிப்படை  காரணிகளற்றதாகும்.

தேர்தலில் போட்டியிடும்   வேட்பாளர்களின்  காரியாலயத்தில்  அவரது  பெயர், சின்னம் மற்றும்   போட்டியிடும் இலக்கம்,  ஆகியவற்றை  கூட     காட்சிப்படுத்த கூடாது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் எவ்வித    உரிய  காரணிகளும் கிடையாது.  அனைத்து வேட்பாளர்களும். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடங்களை  பயன்படுத்தி    தேர்தல்  பிரச்சாரங்களை   முன்னெடுக்க   சமவுரிமை வழங்கப்படாது. ஆகவே  ஆணைக்குழுவின்செயற்பாடுள்   வேட்பாளர்களுக்கு  நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது.

கருணா அம்மான் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் உரிய    விசாரணை  நடவடிக்கை  முன்னெடுக்கப்படுகிறது.   கருணா அம்மானையும், என்னையும் ஒப்பிட்டு  கருத்துரைப்பதை    எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள   வேண்டும்.   விடுதலை  புலிகளை   அழித்தோம் என   நாங்கள்  வாக்கு கேட்கவில்லை.   பயங்கரவாத அமைப்பினை  முழுமையாக இல்லாதொழித்தோம் என்றே  பெருமைக் கொள்கிறோம்.

வடக்கு   மாகாண முன்னாள் முதலமைச்சர்  சி. வி.  விக்னேஷ்வரன்  தொடர்ந்து இனவாத  கருத்துக்களை  குறிப்பிட்டு வருகிறார்.

1947ம் ஆண்டு காலம் தொடக்கம்   சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களை  பல்வேறு   வழிமுறை ஊடாக  படுகொலை செய்தாகவும், தமிழ்  பெண்களை    கருத்தடை சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்   குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவும் பாரதூரமான  குற்றச்சாட்டாகவே  கருத  வேண்டும். அவ்வாறாயின் ஏன்  அவருக்கு எதிராக  நவடிக்கையினை  எடுக்க  எவரும்  குரல் கொடுக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்