ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களுடன் இனிமேல் "பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை " என திட்டவட்டமாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, 

இவ்வாரம் கட்சிக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.