ஹரீன் பெர்னாண்டோவின் தைரியம் என்னைக் கவர்ந்துள்ளது - மங்கள பெருமிதம்

Published By: Digital Desk 3

25 Jun, 2020 | 11:32 AM
image

(நா.தனுஜா)

தற்போதைய பெரும்பான்மை பாசிஸவாத ஆட்சியை ஆதரிக்கின்ற தீவிரவாதப்போக்குடைய பௌத்த மதகுருமாருடன் கூட்டணியைப் பேணுவதாகக் கருதத்தக்க கத்தோலிக்கத் திருச்சபைப் பிரிவுகளின் பாசாங்குத்தனத்தை சவாலுக்கு உட்படுத்தும் ஹரீன் பெர்னாண்டோவின் தைரியம் என்னைக் கவர்ந்துள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.

மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டிருந்த கண்டன அறிக்கையில், ' மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்திற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் அதேவேளை, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கர்தினால் வழங்கிய ஒத்துழைப்பு எப்போதும் மறக்கப்பட முடியாதது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஹரீனின் கருத்திற்கு வலுத்துவரும் கண்டனங்களுக்கு மாறாக, அவரது தைரியத்தை வரவேற்பதாக மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இந்தப் பெரும்பான்மை பாசிஸவாத ஆட்சியை ஆதரிக்கின்ற தீவிரவாத சிந்தனையுடைய பௌத்த மதகுருமாருடன் முறையற்றதொரு கூட்டணியை உருவாக்கியிருப்பதாகத் தோன்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரிவுகளின் பாசாங்குத்தனத்தை சவாலுக்குட்படுத்துவதில் ஹரீன் பெர்னாண்டோவின் தைரியம் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21