கொரோனா சமூகப் பரவலை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளமை மகிழ்ச்சியானது - சுகாதார அமைச்சர்

24 Jun, 2020 | 08:47 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் ஒரு இலட்சம் வரையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களை தடையின்றி வழங்கி முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையால் சமூகப் பரவலைக் முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 500 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் முல்லேரியா வைத்தியசாலையில் அமைக்கப்படுள்ள பரிசோதனை கூடத்தை இன்று புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

பி.சி.ஆர். பரிசோதனைகள் ஒரு இலட்சம் வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வரையில் கொரோனா வைரஸை சமூக பரவாமல் தடுப்பதற்கு முடிந்துள்ளது. 250 இலட்சம் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் இந்த விசேட பரிசோதனை கூடத்தை ஸ்தாபிக்க முடிந்துள்ளது. நவீன தொழிநுட்பங்கள் ஊடாக நாளொன்றுக்கு 500 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும்.

இந்த வேலைத்திட்டத்தின் மொத்த பெருமதி 250 மில்லியன் ரூபாவாகும். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் வேகத்தை அதிகரிப்பதற்காக புதிய நவீன தொழிநுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படும். இங்கு நாளொன்றுக்கு 300 பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் தேவையேற்படின் 1000 வரையிலும் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு இலட்சம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க முடிந்துள்ளமையை எண்ணி நாடு என்ற ரீதியில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த பரிசோதனையை முன்னெடுப்பதற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என்பன அத்தியாவசியமானவையாகும். தேவையான உபகரணங்களில் ஒன்றேனும் இல்லை என்றால் அதனை மேற்கொள்ள முடியாது. அவற்றை குறைபாடின்றி வழங்கி முறையாக பரிசோதனைகளை முன்னெடுத்து சமூகப் பரவலை முற்றாக கட்டுப்படுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. வைரஸ் பரவிய முறைமை குறித்து தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றுக்கு தயாராகுதல் மற்றும் சிகிச்சையளிக்கும் நடைமுறைகளின் கீழ் தேசிய சுகாதார கொள்கையின் நோய் பரிசோதனை அளவை அதிகரிக்கும் நோக்குடன் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துரித வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதான தலையீட்டுடனும் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற சுகாதார கொள்கைகளை மேம்படுத்துவதற்கான பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59