வில்பத்து விவகாரம்:ரிஷாத் உள்ளிட்டவர்களுக்கு தீர்ப்பு ஜூலை 31 இல்

Published By: Digital Desk 3

25 Jun, 2020 | 07:33 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இவ்வாறு தீர்ப்புக்கு திகதி குறிக்கப்பட்ட  குறித்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாக,  வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்,  மத்திய சுற்றாடல் பாதுகாப்பு  அதிகார சபை, மன்னார் மாவட்ட செயலர்,  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  இம்மனு ஊடாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த வனப்பகுதியை மேலும் அழித்து மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி  தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி மஹிந்த சமய வர்தன தீர்ப்பை அறிவிக்க விருப்பம் தெரிவிக்காமையினால் மனுவை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி  யசந்த கோதகொட தீர்மானித்தார்.

அதன்படியே மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் கீழ் இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை மீள விசாரித்தது. அந்த விசாரணைகளே நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32