அனைவரும் எம்முடன் இணையுங்கள், நாட்டை இளம் சந்ததிக்காக கட்டியெழுப்புவோம் - ரணில்

Published By: J.G.Stephan

24 Jun, 2020 | 06:59 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை புதுப்பிக்கக் கூடிய ஒரே கட்சி ஐ.தே.க. மாத்திரமேயாகும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆட்சி அதிகாரம் அத்தியாவசியமானதாகும். யாரும் பின்னடையத் தேவையில்லை. அனைவரும் எம்முடன்  இணைந்து செயற்படுங்கள். எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , கட்சியை புதிய சந்ததியினருக்காக கட்டியெழுப்புவதைப் போன்று நாட்டையும் இளம்  சந்ததிக்காக  கட்டியெழுப்புவோம் என்றும் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை இளைஞர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியே பல புதிய வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. 225 பேரையும் பாராளுமன்றத்திலிருந்து நிலைப்பாடு காணப்பட்டது. நாம் அது பற்றி ஆராய்ந்தோம். இளைஞர்கள் புதுமுகங்களை எதிர்பார்த்துள்ளனர். பழைய அரசியல்வாதிகளுடைய செயற்பாடுகளில் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே தான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பெருமளவான புதுமுகங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சியும் புதிதாகியுள்ளதோடு புதிய வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 அரசியலிலிருந்து விலகிய இளைஞர்களை மீண்டும் இணைத்துக் கொள்வது எமது பிரதான பொறுப்பாகும். அதனுடன் முன்னோக்கிச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் ஆட்சியிலிருந்தபோது பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். பழைய பாராளுமன்ற உறுப்பினர்களை இளைஞர்கள் புறக்கணிக்கின்றனர். அபிவிருத்திகளை மாத்திரமின்றி புதிய கொள்கைகள் நிலைப்பாடுகளையும் அவர்களது தேவையாகவுள்ளது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டங்களில் பாராளுமன்ற செயற்பாடுகளை தொலைக்காட்சியூடாக மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் பாராளுமன்ற அமர்வுகள் பற்றி இளைஞர்கள் திருப்தியடையவில்லை. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக் கூடியதாக இருந்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தினர். உண்மையில் நாம் மாற்று வழியொன்றினை முன்வைக்கவில்லை என்று இளைஞர்கள் எண்ணினார்கள். அதில் உண்மை உள்ளது.

அதன் பிரதிபலன் யாதெனில் அரசியலில் முற்றாக தொடர்பற்ற நபர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எம்மால் களமிறக்கப்பட்டுள்ள புதிய வேட்பாளர்களில் கல்வி கற்றவர்களே அதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளனர். பொதுஜன பெரமுனவைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. எமக்கு மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு ஆட்சி அதிகாரம் அவசியமாகும். மாற்றத்திற்கான யோசனைகளை நாம் முன்வைக்கின்றோம். அதற்காக வாக்களித்ததன் பின்னர் விருப்பு வாக்கினை வழங்குங்கள். மக்களின் குரல்களுக்கு நாம் செவி சாய்ப்போம்.

நாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இதோடு நாம் நின்றுவிடப் போவதில்லை. இளைஞர்களுடன் இணைந்து கட்சியை புதிதாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றோம். கட்சியை புதிய சந்ததியினருக்காக கட்டியெழுப்புவதைப் போன்று நாட்டையும் இளம் சந்ததிக்காக கட்டியெழுப்புவோம். இதுவே எமது இலக்காகும். யாரும் பின்னடையத் தேவையில்லை. அனைவரும் எம்முடன் இணைந்து செயற்படுங்கள். அந்த பொறுப்பை புதிய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அது ஆட்சியை கைப்பற்றுவதற்கல்ல. கட்சியை புதுப்பிப்பதற்காகும்.

நாட்டை புதுப்பிக்கக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும். பழைய முறைமையை பாதுகாப்பதற்கு வேண்டிளவு நபர்கள் இருக்கின்றனர். இளைஞர்களால் புறக்கணிக்கப்பட்ட முறைமையிலேயே தொடர்ந்தும் இருக்க முடியாது. இதே போன்று நவீன தொழிநுட்பமும் மேம்படுத்தப்பட வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58