தமிழரின் இருப்பும் அபிவிருத்தியும் கொழும்பில் ஒரு சேர பயணிக்க வேண்டும் : வி.ஜனகன் 

23 Jun, 2020 | 10:29 PM
image

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை உறுதி செய்வதுடன் அவர்களின் அபிவிருத்தியை பற்றியும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த கருத்தை  முன்வைத்தார். வடக்கு கிழக்கு அரசியலைப் போன்றல்லாது கொழும்பு அரசியல் மிகவும் மாறுபட்ட ஒன்று.

அங்கு தமிழ்த் தேசியம், அதிகாரப்பரவலாக்கல் மற்றும் தமிழர் உரிமை தொடர்பான விடயங்களைத்தான் பிரதானமாக கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், கொழும்பு மாவட்டத்தில் வடக்கு கிழக்கு உட்பட மலையகம் மற்றும் ஏனைய பிரதேசங்களைச்  சேர்ந்த மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, கொழும்பில் ஒரு வேட்பாளராக நீங்கள் களமிறங்கும் போது எவ்வாறான பிரச்சினைகளை சரிசெய்ய நீங்கள் முயற்சிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கலாநிதி வி.ஜனகன், "கொழும்பு மாவட்டத்தைப்  பொருத்தவரை தமிழ் பேசும் மக்கள் கரிசனையற்ற நிலைமையைத்தான் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். கொழும்பிலேயே கல்வி கற்று, தொழிற்றுறையில் ஈடுபடுகின்றவன் என்ற ரீதியில் இந்த மக்களின் பிரச்சினைகளை அறிந்து வைத்திருக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு, மலையகம், என்ற ரீதியில்தான் எமது மக்களின் பிரச்சினைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், கொழும்பில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. கடந்த கொரோனா நிர்வாக முடக்க காலத்திலும் தமிழர்களுக்கு ஒரு நெருக்கடி என்றால் வடக்கு கிழக்கையோ அல்லது மலையகத்தைப் பற்றியோ பேசுகிறார்கள். 

கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்களின் இருப்பே ஒரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாகத்தான் இந்த நிலைமை தோன்றியிருக்கின்றது.

இந்த அடிப்படையில்தான் ஜனநாயக்க மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவராக இருக்கக் கூடிய மனோ கணேசன் அவர்கள், 2010  மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலோ அல்லது 

அதற்கு முற்பட்ட காலங்களிலோ தன்னுடன் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரை உள்வாங்குவதற்காக ஒரு வேட்பாளரை  நியமிப்பார். தனக்கு பதிலாக ஒரு சிங்கள வேட்பாளரையோ அல்லது முஸ்லிம் வேட்பாளரையோ நியமிக்கவில்லை. 

எப்போதுமே ஒரு தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான காரணம் நிச்சயமாக கொழும்பைப் பொறுத்தவரையில், இரண்டு அல்லது மூன்று தமிழ் வேட்பாளரை நியமிப்பது கட்டாயமாகும்.

அது எங்கள் மிக முக்கிய உரிமையாக இருக்கின்றது. ஆனால் அந்த உரிமையை நாங்கள் இழந்துவிட்டு தவிக்கின்றோம்.

எனவேதான், மிக கடினமான விடயமாக இருந்தாலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தனக்கு அடுத்ததாக ஒரு தமிழ் வேட்பாளரை நியமிப்பார்.  ஆனால் இந்த விடயத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.  இந்தநிலைமையில்தான் 

மனோ கணேசன் அவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுகின்றார். அவருக்கு அடுத்ததாக வரும் இரண்டாவது வேட்பாளர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது" என்று கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தமிழ் பேசும் மக்கள் மனோ கணேசனின் இந்த நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அவரது சேவைகள் போதுமானதாக இல்லையா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "2015 ஆம் ஆண்டு மனோ கணேசன் அவர்கள் முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

அதன்படி, கடந்த காலங்களில் தான் பதவி வகுத்த காலப்பகுதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான  வேலைத்திட்டங்களை மேற்கொண்டதன் காரணமாக இந்த முறை மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு சேர்க்க முடியும் என்று மனோ கணேசன் உறுதியாக இருக்கின்றார்" என்றும் கலாநிதி வி.ஜனகன் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02