யாழில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சகோதரர்கள் இருவர் கைது

23 Jun, 2020 | 10:24 PM
image

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.

“யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சந்தேக நபர்கள் இருவரில் மூத்த சகோதரர் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்துக்கு 4 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து அண்மையில் விடுதலையாகியவர்.

சகோதரர்கள் இருவரும் இணைந்து அதிகாலை 5.30 மணிக்கும் காலை 6.30 மணிக்கும் இடையில் ஆலயங்கள், வேலைக்குச் செல்வதற்காக வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு  கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் சங்கிலிகள், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரிடம் அறுக்கப்பட்ட சுமார் 3 பவுண் எடையுடைய ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் திருடப்பட்ட ஹங் ரக மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11