கொரோனாவல் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க உதவும் டெக்சாமெத்தசோன்!

23 Jun, 2020 | 08:19 PM
image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை டெக்சாமெத்தசோன் என்ற மருந்து குறைத்து வருவதால், அத்தகைய மருந்தை அதிக அளவில் தயாரிக்க வேண்டும் என பல நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

90 மில்லியனுக்கு மேல் மக்களை பாதித்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க இயலாமல் சர்வதேச நாடுகள் தவித்து வருகின்றன. அதற்கான தடுப்பு மருந்து குறித்த ஆய்வு கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு நாடுகளில் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரையில் கொரோனா நோய் முற்றிலும் குணமாகும் அதிகாரப்பூர்வ மருந்து கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் ஒஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் டெக்சாமெத்தசோன் என்ற மருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிரிழப்பை 35 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக லண்டன் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து இத்தகைய டெக்சாமெத்தசோன் என்ற மருந்தை கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில், அதிகளவில் உற்பத்தி செய்யுமாறு சர்வதேச நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதே தருணத்தில் இந்த மருந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும், தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்தினால் பக்க விளைவு ஏற்படக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்திருக்கிறது.

டொக்டர் ஸ்ரீதேவி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04