ராஜபக்சாக்கள் பகல் கனவு காண்கின்றார்கள்: அநுரகுமார

Published By: J.G.Stephan

23 Jun, 2020 | 05:34 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய குழுக்களுடைய தேவைக்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதன் பின்புலத்தில் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளமையே இதற்கான காரணமாகும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்ற  ஊழல்  மோசடிகளுக்கு  எதிரான போராட்டங்களில் ஜே.வி.பி,  பிரதானமாகச் செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும். ராஜபக்சக்களும், ஊழல் மோசடிக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் ஊழல் மோசடிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடக்க முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து அதன் மூலம் எமது போராட்டங்களை முடக்கி விடலாம் என்று அவர்கள் கற்பனை செய்துள்ளனர். ஆணைக்குழுவிற்கு அழைப்பது மாத்திரமல்ல. எம்மை சிறையிலடைத்தாலும் எமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது.

இவ்வாறான சிறு செயற்பாடுகள் மூலம் ஜே.வி.யின் போராட்டங்களை நிறுத்தவிட முடியாது என்பதை ராஜபக்சக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு எண்ணுவார்களாயின் அது அவர்களது பகல் கனவாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்டவர்களில் அரசியல் குழுக்களும் உள்ளடங்குகின்றன. இவற்றில் அவன்ட்கார்ட் நிறுவனமும் ஒரு பங்குதாராகும். கடற்படையினரால் முறையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் கோத்தாபய ராஜபக்ஷவின் தலையீட்டினால் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அது பொது மக்களுக்கு உரித்துடைய தேசிய சொத்தாகும்.

எனவே இதனை தனியார்துறை கையகப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் இது தொடர்பில் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ள என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். சிலர் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அதே போன்று அரச திணைக்களங்களின் தலைவர்களாகவும் பலர் உள்ளனர். மக்களின் சொத்துக்களை  கொள்ளையடித்த இவ்வாறான நபர்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போராட்டங்களை இவ்வாறான சிறிய அழுத்தங்களுக்காக நாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58