பூச்சி மருந்து அனை­வ­ருக்கும் அவ­சி­யமா ?

Published By: Robert

03 Jul, 2016 | 10:41 AM
image

வீட்டில்  யாருக்­கா­வது வயிற்­று­வ­லியா? சரு­மத்தில் திடீர் அரிப்பா? பசியே இல்லை என்­கி­றார்­களா? பூச்சி மருந்து கொடுத்துப் பார்க்கச் சொல்லி பெரி­ய­வர்கள் அறி­வு­றுத்­து­வதைக் கேட்­டி­ருப்போம். யாருக்கு பூச்சி மருந்­துகள் அவ­சியம்? ஏன் அவ­சியம்? எத்­தனை நாட்­க­ளுக்­கொரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்? என விளக்­கு­கிறார் பொது­நல மருத்­துவர் கலை­மதி.

“குழந்­தை­களை பாதிக்­கக்­கூ­டிய ஒரு முக்­கி­ய­மான பிரச்சினை குடற்­புழுத் தொல்லை. அசுத்­த­மான இடங்­க­ளிலும், மண் தரை­யிலும், தண்­ணீ­ரிலும் விளை­யா­டு­வது, அழுக்­க­டைந்த பொம்­மை­க­ளுடன் விளை­யா­டு­வது, குழந்­தை­களும் பெரி­ய­வர்­களும் காலில் செருப்பு அணி­யாமல் நடப்­பது, உணவு சாப்­பி­டு­வ­தற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்­தப்­ப­டுத்தத் தவ­று­வது, சமை­ய­லுக்கு முன் காய்­க­றி­களைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவ­று­வது போன்ற சுகா­தா­ர­மற்ற பழக்­கங்­களே குடற்­புழு ஏற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மா­கின்­றன.

பூச்­சிகள் இருந்தால், சரி­யாக சாப்­பி­டாமல் மெலிந்து, நிறம் வெளிறி காணப்­ப­டு­வார்கள். சில­ருக்கு வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்­றுப்­போக்கு ஏற்­ப­டலாம். சாலை­யோர உண­வ­கங்­களில் கைகளால் நேர­டி­யாக உணவு பரி­மா­றப்­ப­டு­வதால் அமீ­பி­யாசிஸ் தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதி­க­மா­கி­றது. இந்தத் தொற்று ஏற்­பட்­ட­வர்கள் சாப்­பி­டு­வ­தற்கு முன்னும் பின்னும் வயிற்று வலியால் அவ­திப்­ப­டு­வார்கள்.

அடிக்­கடி மலம் கழிக்க வேண்­டி­யது போல உணர்­வார்கள். குடற்­புழுத் தொற்று ஏற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு சரு­மத்தில் வெள்­ளைத்­திட்­டுகள் தோன்றி அரிப்பு ஏற்­படும். சில புழுக்கள் ஆசன வாயிலில் முட்டை இடு­கின்­றன. இதனால், அந்த இடத்தில் இரவில் அதிக அரிப்பு ஏற்­படும். அறி­யாமல் சொறிந்து கொண்டு, அதே கைகளை குழந்­தைகள் வாயில் வைக்­கும்­போது, பூச்­சிகள் மீண்டும் உட­லுக்குள் செல்­வது ஒரு தொடர் சுழற்­சி­யா­கவே நடை­பெறும்.

கொக்­கிப்­புழு நாளொன்­றுக்கு 0.2 மி.லி. இரத்­தத்தை உறிஞ்­சி­விடும். இதனால் இந்தப் புழு தாக்­கி­யுள்ள நப­ருக்கு வயிற்றுப் பிரச்சி­னை­க­ளோடு இரத்­த­சோகை நோயும் ஏற்­படும். இரத்­த­சோகை, சோர்வு, வெளி­றிய முகம் போன்ற அறி­கு­றிகள் தோன்றும் போது பெரி­ய­வர்­களும் மருத்­து­வ­ரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.குடற்­பு­ழுவை ஒழிக்கப் பெரி­ய­வர்­க­ளுக்கு மாத்­தி­ரை­களும், குழந்­தை­க­ளுக்குத் திரவ மருந்தும் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

பல­வகைப் புழுக்கள் இருப்­பதால், மேற்­கூ­றிய அறி­கு­றிகள் இருப்­ப­வர்கள் எந்தப் புழுவின் பாதிப்பு உள்­ளது என்­பதை மலப் பரி­சோ­தனை மூலம் தெரிந்­து­ கொண்டு, அதற்­கேற்ப மருத்­துவர் கூறு­வது போல குடற்­புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். 2 வய­துக்கு மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு 6 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை உள்­ளுக்குள் மருந்து கொடுக்க வேண்டும். மற்­ற­வர்­களைக் காட்­டிலும், அதி­க­மாக பாதையோர கடை­களில் சாப்­பி­டு­ப­வர்கள் குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில் குடற்­புழு நீக்கம் செய்து கொள்­வது மிக­மிக அவ­சியம்.

அவ­ரவர் வய­துக்­கேற்­ற­ப­டியும், நோய் அறி­கு­றி­க­ளுக்கு ஏற்­ற­வாறும் மருந்­து­களும் அளவும் மாறு­படும் என்­பதால் மருத்­து­வரின் ஆலோ­ச­னைப்­ப­டியே மருந்து எடுத்­துக்­கொள்ள வேண்டும். மாறாக தாங்­க­ளா­கவே மருந்துக் கடை­களில் கிடைக்கும் De-worming மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேற்கூறிய முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். புழுக்கள் அழியும்போது தானாகவே சருமத்தில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள், தடிப்புகள் போன்றவையும் மறைந்துவிடும்” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் கலைமதி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32