3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று

Published By: J.G.Stephan

23 Jun, 2020 | 07:41 AM
image

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யத் தயாராகிவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் 19 வயதான துடப்பாட்டவீரர் ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷடாப் கான், வேகப்பந்து விச்சாளர் ஹரிஸ் ரவுப் ஆகியோருக்கு கொவிட் - 19 தொற்றியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த மூன்று வீரர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தப்படுவர்.

இவர்களுடன் இமாத் வசிம், உஸ்மான், ஷின்வாரி ஆகியோருக்கும்  ராவல்பிண்டியில் கொவிட் - 19 பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த இருவருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பந்துவீச்சு பயிற்றுநர் வக்கார் யூனிஸ், சகல துறை விரர் ஷொயெப் மாலிக், கிலிவ் டீக்கன் ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய சகல வீரர்களும் அதிகாரிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்படனர். அவர்களது மருத்துவ அறிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 23ஆம் திகதி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் இங்கிலாந்து செல்வதற்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது பெரும் சவாலை தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் வீரர்கள் கூட்டாக பயிற்சிகளை இன்னும் ஆரம்பிக்காததால் குழாத்தில் இடம்பெறும் சகல வீரர்களையும் தனிமைப்படுமாறு கோரவில்லை. ஆனால். குறிப்பிட்ட மூன்று வீரர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை சுய தனிமைக்குள்ளாகுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35