புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் ரணில்

Published By: Robert

03 Jul, 2016 | 10:36 AM
image

தென் ஆசி­யாவின் புலம்­பெயர் அமைப் பின் 3 ஆவது தட­வை­யாக நடை­பெறும் அமர்வில் கலந்­து­கொள்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சிங்­கப்பூர் செல்­ல­வுள் ளார். எதிர்­வரும் 18 ஆம் 19 ஆம் திக­தி­களில் இந்த அமர்­வுகள் சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த அமர்வின் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்­ள­வுள்ள பிரமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இங்கு பிர­தான உரை­யாற்­ற­வுள்ளார்.

அத்­துடன் முன்னாள் நீதி­ய­ரசர் சிராணி பண்­டா­ர­நா­யக்க தெற்கு ஆசி­யாவில் சட்டம் மற்றும் சமா­தானம் என்றும் தொனிப்­பொ­ருளின் கீழ் உரை­யாற்­ற­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் பிராந்­திய வர்த்­தகம், பொரு­ளா­தாரம் மற்றும் கொள்­கைகள் தொடர்­பி­லான சவால்­களை வெற்­றி­கொள்ளும் நோக்கில் இடம்­பெ­ற­வுள்ள இந்த அமர்­வு­களில் சிங்­கப்பூர் பிர­தமர் உள்­ளிட்ட பிராந்­திய வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள், கல்வி மற்றும் சிவில் அமைப்­புக்­களின் தலை­வர்­களும் கலந்­து­கொள்வர்.

குறித்த மாநாடு தொடர்­பான பிர­சா­ரங்­களை மேற்­கொள்ள இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான உள்ளூர் பிர­தி­நி­தி­யாக நியூ மிலே­னியம் கொன்ஸெப்ற் பணிப்­பாளர் சுரேஸ் ரேஸா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இது தொடர்­பாக வெளி­யிப்­பட்­டுள்ள அறிக்­கையில்,

சிங்­கப்பூர் வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் வர்த்­தக மற்றும் தொழிற்­றுறை அமைச்சின் கூட்­டு­றவில் சிங்­கப்பூர் தேசிய பல்­க­லை­க் க­ழ­கத்தின் தெற்கு ஆசிய கற்­கைகள் நிறு­வ­கத்தின் (ISAS) ஆத­ரவில் தெற்கு ஆசிய புலம்­பெ­யர்ந்தோர் மகா­நா­டு யூலை 18 -19ஆம் திக­தி­களில் றபிள் சிற்ரி மகா­நாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெறும்.

இம்­ம­கா­நாட்­டுக்­கென சுமார் 1000 புகழ் பெற்ற விருந்­தி­னர்­களும் இப்­பி­ராந்­தி­யத்தின் முன்­னணி அர­சியல் வர்த்­தக பிர­மு­கர்கள், கொள்கை வகுப்­பாளர், புகழ்­வாய்ந்த நூலா­சி­ரி­யர்கள் விருது பெற்ற ஊடா­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் கல்­வி­மான்­களும் ஒன்று திரள்­வார்கள்

சிங்­கப்பூர் மற்றும் தென்­னா­சி­யாவை சேர்ந்த பல அமைச்­ச­ரவை அமைச்­சர்­களும் பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­களும் இதில் உரை­யாற்­ற­வி­ருக்­கி­றார்கள். முக்­கிய உரையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆற்­றுவார். இதில் உரை­யாற்­று­ப­வர்கள் 21ஆம் நூற்­றாண்டில் ஆசி­யா­வையும் உல­கையும் பாதிக்கப் போகின்ற திருப்புமுனை விட­யங்­க­ளான பூகோள பொருண்­மியம் மற்றும் பூகோள அர­சியல் தொடர்­பான தலைப்­பு­களின் கீழ் ஆய்­வு­ரை­க­ளையும் விவா­தங்­க­ளையும் நடத்­து­வார்கள்.

மேற்­படி நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும் நேரங்கள் பற்­றிய மேல­திக தக­வல்­களை http:/www.southasiandiaspora.org/pages/default.htmlஇல் பார்­வை­யி­டலாம். இந்த நிகழ்வின் மகுடம் போல் பிர­தமர் லீ ஹ்சியென் லூங் ஒரு இரவு விருந்தை அளிப்பார்

இந்த மகா­நா­டா­னது குழு­நிலை கலந்­து­ரை­யா­டல்கள், குறிப்­பிட்ட நிகழ்­வுகள் பற்­றிய ஆய்­வுகள் மற்றும் பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­க­ளுக்­கான வலை­ய­மைப்பு உரு­வாக்க அமர்வு என்­பன அடங்­கு­வ­தோடு தற்போது தொழிற்றுறை எதிர்கொள்ளும் முக்கிய விடயங்களில் எற்பட்டிருக்கும் புதிய போக்குகள் மற்றும் நிகழ் காலமட்டத்துக்கு கொண்டு வருதலும் இடம்பெறும். உலகவங்கி, IFC, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் AIIBஇன் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான பிரத்தியேக வாய்ப்பாகவும் இது இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04