கருணா கூறியது தவறு: நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயவில்லை - சுதந்திர கட்சி

Published By: J.G.Stephan

22 Jun, 2020 | 10:35 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவத்தினரைக் கொன்றதாகக்  கருணா அம்மான்  கூறிய விடயங்கள் தவறானவை. எனினும் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்சி ரீதியாக  எவ்வித  தீர்மானமும் எடுக்கப்படவில்லை  என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரான கருணா அம்மான் முன்வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில்  கட்சியின் நிலைப்பாட்டை  வினவிய போது இதனைத்  தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கருணா அம்மான் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது முன்னரே அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே அவற்றைப் பற்றியும் அவரது இவ்வாறான செயற்பாடுகளைப் பற்றியும் ஆராய்வதற்கு காலம் இருந்தது. எனினும் அப்போது அவை பற்றி ஆராயப்படவில்லை.

தற்போது அவை பற்றி ஆராய்வதில் பயனில்லை. எனினும் அமைதியான சூழலில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது பொறுத்தமாக இருக்காது. எனவே அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

அத்தோடு ஸ்ரீலங்கா  சுதந்திர  கட்சி இது வரையில் இவ்விடயம் தொடர்பில் கட்சி ரீதியாக எவ்வித  தீர்மான்ததையும் எடுக்கவில்லை. எனவே கட்சியின்  ஸ்திரமான நிலைப்பாட்டை தற்போது கூற முடியாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44